இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் புதிய முயற்சி! மலைப்பாங்கான பகுதிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து விநியோகம்!

ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பாங்கான பகுதிக்கு மருந்து பொருள்களை ட்ரோன் மூலம் எளிதில் கொண்டு சேர்க்கும் பணியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது. 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில்…

ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பாங்கான பகுதிக்கு மருந்து பொருள்களை ட்ரோன் மூலம் எளிதில் கொண்டு சேர்க்கும் பணியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது.

140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இன்றும் பல கிராமங்களுக்கு பேருந்து வசதி கொடுக்க முடியாத நிலை உள்ளது.  அதிலும் வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் இமயமலையை ஒட்டிய ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மலைப்பகுதிகளில் உள்ள பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருள்களை கொண்டு சேர்ப்பது கடினமான பணியாகவே இருந்து வருகிறது.

மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள மலைகிராமங்களுக்கு மருத்துவ சேவை இன்றும் எட்டாக்கனியாகவே இருப்பதே நிதர்சனம்.  இதனால் அவசர தேவைக்கு முக்கிய மருந்துகள் கிடைக்காமல் பல நேரங்களில் உயிருக்கே ஆபத்தான சூழல் கூட ஏற்படுவதுண்டு.

இந்நிலையில்,  இந்த பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வாக வாகனங்கள் மூலம் எளிதில் அடைய முடியாத பகுதிகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை விரைந்து அனுப்ப இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக ஹிமாச்சல் பிரதேசத்தில் ட்ரோன் வாயிலாக அத்தியாவசிய மருந்துகளை டெலிவரி செய்யும் பணியை சோதனை முறையில் வெற்றிகரமாக செய்துள்ளது.

லாஹவுல் & ஸ்பிட்டி மாவட்டத்தில் 20 கிலோமீட்டருக்கு 100 யூனிட்களுக்கு மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளை ட்ரோன் வாயிலாக வெற்றிகரமாக கொண்டு சென்றது.  இரண்டு மணி நேரத்தில் கடக்கக்கூடிய மலைப்பகுதியை 26 நிமிடத்தில் கடந்து மருந்து விநியோகிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.