உங்களைச் சிறப்பாகச் செயல் பட செய்ய தூண்டும் நபர்களை உங்களைச் சுற்றி வைத்துக் கொள்ளுங்கள் என நடிகர் அஜித் தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்,நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணியுடன் இணைந்து துணிவு எனும் படத்தில் நடித்துவருகிறார். இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். படத்திற்கு ஜிப்ரன் இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்படி பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் பிசியாக இருக்கும் அஜித் அவ்வப்போது தன் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்குவது வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட காதுகளை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என ரசிகர்களுக்கு அறிவுரை கூறி இருந்தார். இதனை தொடர்ந்து, இன்று ரசிகர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அஜித் அனுப்பிய மேசேஜை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் உங்களைச் சிறப்பாகச் செயல் பட செய்ய தூண்டும் நபர்களை உங்களைச் சுற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
நாடகமோ எதிர்மறையோ இல்லாமல்,உயர்ந்த இலக்குகள் மற்றும் அதிக உந்துதலுடன், நல்ல நேரம் மற்றும் நேர்மறை ஆற்றலுடன் பொறாமையோ வெறுப்போ இல்லாமல் ஒருவருக்கொருவர் முழுமையான சிறந்ததை வெளியே கொண்டு வர வேண்டும். வாழு வாழ விடு, நிபந்தனையற்ற அன்பு அஜித் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.