முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆடுகள் மழையில் நனைகிறதா…. இதை ஃபாலோ பண்ணுங்க…

ஆடுகள் மழையில் நனையாமல் இருக்க விவாசாயி ஒருவர் புதுவித யுக்தியை கண்டுபிடித்து உள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள குலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்
கணேசன் (70). விவசாயியான இவர் ஆடு, மாடு, கோழி என கால்நடைகள் வளர்ப்பில்
ஆர்வமாக ஈடுப்பட்டு வருகிறார். இவர் தான் வளர்க்கும் கால்நடைகளை தனது சொந்த குழந்தைகள் போல் எண்ணி அதனை பராமரித்து வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் மேய்சலுக்கு சென்ற அவரது ஆடுகள் மழையில் நனைந்து சிரமத்துக்கு ஆளானது. தன்னுடைய பிள்ளைகளாக கருதி ஆடு வளர்ப்பில் ஈடுப்பட்டு வரும் கணேசனுக்கு ஆடு மழையில் நனைந்து ஈரத்தில் நடுங்குவதை பார்க்க மனமில்லை.

“எலே நீ Artist-னு நிரூபிச்சிட்டல” - ஆடுகளுக்கு புதிய வகை ரெயின் கோட் - வைரல் வீடியோ

மேய்ச்சலுக்கு போகும்ஆடு மழையில் நனையாமல் இருக்க என்ன செய்யலாம் என யோசித்தவருக்கு ஆடுக்கு ”ரெயின் கோட்” போட்டால் என்னவென்று தோன்றியிருக்கிறது.
சட்டனெ அதை பிடித்து கொண்டவர் அரிசி சாக்கினை ரெயின் கோட்டாக்கி ஆடுகளுக்கு
அணிந்து விட்ட பிறகு தினமும் மேய்ச்சலுக்கு அனுப்பி வருகிறார்.

இதனால் ஆடுகள் மழையில் நனையாமல் செல்கின்றன. செயலை பார்த்தவர்கள் அவரை நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர். மேலும் சாக்கு அணிந்து செல்லும் ஆடுகளின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram