திருமண மண்டபங்களில் மது அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்படாது- அமைச்சர் செந்தில் பாலாஜி

திருமண மண்டபங்கள் உட்பட மற்ற நிகழ்ச்சிகளில் மது அருந்துவதற்கான அனுமதிகள் தமிழ்நாட்டில் ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,…

திருமண மண்டபங்கள் உட்பட மற்ற நிகழ்ச்சிகளில் மது அருந்துவதற்கான அனுமதிகள் தமிழ்நாட்டில் ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில்
பாலாஜி, சர்வதேச கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்ற போது
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் உள்ள நடைமுறையை போல் தமிழ்நாட்டிலும்
அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தார்கள். அதன் அடிப்படையில் சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெறும் போது மட்டும் மது அருந்துவதற்கான அனுமதிகள் வழங்கப்படுகிறது.

குறிப்பாக திருமண மண்டபங்கள் உட்பட மற்ற நிகழ்ச்சிகளில் மது அருந்துவதற்கான அனுமதிகள் தமிழ்நாட்டில் ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது என தெரிவித்தார். மண்டபங்களில் நடக்கக்கூடிய திருமண நிகழ்ச்சிகளுக்கு மது அருந்துவதற்கு அரசு அனுமதி வழங்காது. உலக முதலீட்டாளர் மாநாடு, ஐ.பி.எல் போட்டி போன்ற சர்வதேச அளவில் நடைபெறுகிற போட்டிகளுக்கு மட்டும் சிறப்பு அனுமதிகள் வழங்கபடுகிறது.

இது போன்ற அனுமதிகள் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது. சர்வதேச தரத்திலான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெற வேண்டும் என்றால், மற்ற மாநிலங்களில் பின்பற்றப்படக்கூடிய நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் மட்டும் தான் இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போல சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியிலும் அதற்கான அனுமதிகள் பெறப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், குறுகிய காலத்தில் டெண்டர் மூலம் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதன் அடிப்படையில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு மூன்று மாதத்தில் மட்டும் ரூ.1,312 கோடி சேமிப்பு உருவாகி இருக்கிறது. கோடைக்காலத்தில் எவ்வளவு மின்தேவை ஏற்பாட்டாலும் அதை சமாளிப்பதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் தயாராக இருக்கிறது மின்தேவையைப் பொருத்தவரை எந்த ஒரு பாதிப்பும் இல்லாத வகையில் சீரான மின்சாரம் வழங்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது என தெரவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.