“வாழ்நாள் எதிரிகள், ஒரே இரவில் ஒன்றானார்கள்” – காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம்!

விஜய்யை தடுத்து நிறுத்த ஒரே இரவில் ஒன்றான திராவிட கட்சிகள் என்று மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை தவெக வென்றுள்ளது. இருப்பினும் ஆட்சியமைக்க தவெகவிற்கு 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. இதற்கிடையில் 5 எம்.எல்.ஏக்களை கொண்ட காங்கிரஸ் கட்சி தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளது. இதனால் தவெக ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என ஆளுநர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் எஞ்சிய 6 இடங்களுக்காக விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் விஜய் ஆதரவு கேட்டுள்ளார்.

இதற்கிடையில் தேர்தலில் இரு துருவங்களாக நின்ற திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைப்பதற்காக முயற்சிகள் திரைமறையில் நடப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியது. இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த பதிவில், “இரண்டு திராவிட கட்சிகள். வாழ்நாள் எதிரிகள்.

ஒரே இரவில் ஒன்றானார்கள். தமிழகத்திற்காக இல்லை. மதச்சார்பின்மைக்காக இல்லை.
ஒரே ஒரு மனிதனை நிறுத்த விஜய்யை. காங்கிரஸ் தெளிவாக பார்த்தது வெளியேறியது.

RSS/BJP-யின் B-டீமுடன் படுத்துக்கொண்டு உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்ல முடியாது.
“நிலையான அரசு” என்பது இரண்டு பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தை காக்கும் அரசியல் மொழி.
காங்கிரஸ் சரியாகவே வெளியேறியது.
திமுக இன்று தன் முகமூடி.
துரோகி யார்?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.