அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “அதிமுகவில் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக துணைப் பொதுச் செயலர்களாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் மூத்த நிர்வாகிகள் தங்கமணி, கருப்பணன், சண்முகநாதன், கே.பி. அன்பழகன், காமராஜ், கே.சி. வீரமணி, திருத்தணி கோ.அரி, பாலகிருஷ்ண ரெட்டி, கிருஷ்ணமுரளி, மருதராஜா, சௌந்தரராஜன் ஆகியோர் அமைப்புச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலர்களாக எம். ஆர். விஜயபாஸ்கர், எம் மணிகண்டன், ஆ அருண்மொழிதேவன், சி. மகேந்திரன், என்.எஸ்.என். நடராஜ், எம். ரெத்தினசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய செயலர்களை நியமித்து, அந்தக் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
முன்னதாக, அதிமுகவில் நிலவிய உள்கட்சி பிரச்னை காரணமாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் வேலுமணி தலைமையில் இரு அணிகளாக செயல்பட்டு வந்தது. முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோரை, அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி கட்சிப் பதவியிலிருந்து நீக்கியிருந்த நிலையில் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.




