வாழ்வா? சாவா?? நிலையில் பஞ்சாப்; பேட்டிங்கை தொடங்கியது பெங்களூரு

ஐபிஎல் 48வது இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்று பெங்களூரு பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தில் கடைசி 2 இடங்களில் யார் தங்களை…

ஐபிஎல் 48வது இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்று பெங்களூரு பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தில் கடைசி 2 இடங்களில் யார் தங்களை நிலை நிறுத்திக்கொள்கிறார்கள் என்பதற்கான கடுமையான பலபரீட்சை இன்று நடைபெறுகிறது.

புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள பெங்களூரு அணி 5வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. இப்போட்டியில் பெங்களூரு அணியின் சார்பில், விராட் கோலி, தேவதூத் படிக்கல், கே.எஸ்.பாரத், மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், டான் கிறிஸ்டியன், ஷாபாஸ் அகமது, ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

இந்த ஆட்டத்தில் தனது ப்ளே ஆப் வாய்ப்பை பெங்களூரு உறுதி செய்யுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணியில் கோலி மற்றும் படிக்கல் முதலில் களமிறங்கியுள்ளனர்.

அதே போல பஞ்சாப் அணி சார்பில், கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், சர்பராஸ் கான், ஷாரு கான், மோயிஸ் ஹென்ரிக்ஸ், ஹர்பிரீத் பிரார், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

இந்த போட்டி பஞ்சாப் அணிக்கு வாழ்வா சாவா நிலையை தீர்மானிக்கும் போட்டியாகும். அதே போல இன்று நடைபெறும் மற்றொரு போட்டியில், கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.