பவானிபூா் இடைத்தேர்தலில் மம்தா வெற்றி

மேற்கு வங்க மாநிலம் பவானிபூா் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றிப் பெற்றுள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானா்ஜி…

மேற்கு வங்க மாநிலம் பவானிபூா் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றிப் பெற்றுள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானா்ஜி தோல்வியுற்றாா்.

இருந்தாலும் முதலமைச்சராக அவா் பதவியேற்றாா். பதவியேற்ற 6 மாதங்களுக்குள் அவா் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால், பவானிபூர் தொகுதி திரிணமுல் எம்.எல்.ஏ., சோபன்தே தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதிக்கு செப்.30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

பவானிபூா் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட்டாா். அவரை எதிா்த்து பாஜக சாா்பில் பிரியங்கா டிப்ரேவால் போட்டியிட்டார். இத்தொகுதியில் சுமாா் 53 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதில் காலை முதலே முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னிலை பெற்று வருந்தார். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பிரியங்கா விட 58,832 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

பவானிபூர் தவிர ஷாம்ஷெர்கஞ்ச், ஜாங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக் கையும் நடந்து வருகிறது. முன்னதாக நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரசிலிருந்து வெளியேறிய சுவெந்து அதிகாரி பாஜக சார்பில் களமிறக்கப்பட்டார். இதில் கடும் போட்டிக்கு மத்தியில் சுவெந்து வெற்றிப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.