சிவகாசி அருகே தமிழ்நாடு முதல்வரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்துனர்.
சிவகாசி மாநகராட்சி மற்றும் சிவகாசி சுகாதார வட்டாரம் சார்பில் தமிழக முதல்வரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அசோகன் ஆகியோர் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து மருத்துவ முகாமில் கண்நோய், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய பாதிப்பு, மன நோய் போன்ற பாதிப்புகள் குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்துனர்.
– கோ. சிவசங்கரன்