தமிழகம் செய்திகள்

ரேசன் அரிசி மூட்டைகளுடன் சென்ற லாரி கவிழ்ந்து தீ விபத்து!

செங்கோட்டை அருகே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து தீ விபத்திற்கு உள்ளானது,

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு செயல்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ரேசன் கடைகளுக்கு இவ் வாணிப கிடங்கில் இருந்து தான் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து நேற்று வாணிப கிடங்கில் இருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி ஒட்டுநர் சரவணன் என்பவர் பொருட்களை ஏற்றியதற்கான ரசீதை பெறுவதற்காக லாரியை பண்பொழி நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தி வைத்து விட்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து லாரி இறக்கமான பகுதியில் இருந்ததால் பின்நோக்கி சென்று மின் கம்பியில் உரசிய படி கவிழ்ந்துள்ளது. பின்னர் லாரியின் மேல் இருந்த ரேசன் அரிசி மூட்டைகள் தீ பற்றி எரிய தொடங்கி உள்ளது. இதனையடுத்து அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் லாரியின் மேல் இருந்த அரிசி மூட்டையில் எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

– கோ. சிவசங்கரன்.


நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை’ இரவு 10 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகளுக்கு தடை!

Saravana

நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மைக்கு பிரதமர் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் – திருமாவளவன்

G SaravanaKumar

நிலங்களை மீட்க முழு ஒத்துழைப்பு அவசியம்-அமைச்சர்

Halley Karthik