கரூரில், ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்தவர்கள் வண்ண பொடிகளை
தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
கரூரில் பேருந்து நிலையம், செங்குந்தபுரம், காமாட்சியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில், வடமாநிலங்களை சார்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் டைல்ஸ், கிரானைட், பேன்சி மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் கடைகளை நடத்தி வருகின்றனர். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வரும் இவர்கள், ஆண்டு தோறும் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு முருகனாதபுரம் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்தவர்கள், இருபதுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஒருவருக்கு ஒருவர் வண்ணப் பொடிகளை தூவியும், பூசிக் கொண்டும் ஹோலி பண்டிகை கொண்டாடினர். மேலும், இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர்.
—கு.பாலமுருகன்








