வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம்! – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ஆதரவாக தாம் உள்ளதாகவும், விவசாயிகளின் நலனுக்காக மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக தாம் உள்ளதாகவும், விவசாயிகளின் நலனுக்காக மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வேளாண் சட்டம் இயற்றுவதற்கு முன்னரே கார்ப்ரேட் நிறுவனங்கள், சேமிப்புக் கிடங்குகளை உருவாக்கியதால் தான், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை எனவும் மம்தா சாடினார். ஹரியாணா, டெல்லி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply