சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழில் சூரரைப்போற்று திரைப்படம், சிறந்தப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் மொத்தம் 5 விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது. சூரரைப்போற்று திரைப்படத்தைச் சுதா கொங்காரா இயக்கியிருந்தார். இந்த படம் உண்மை கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்நிலையில், முற்போக்கு படைப்புகள் திரையை ஆளட்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘2,033 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி!’
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 68-வது தேசிய விருதுகளில் விருதுகளைக் குவித்துத் தமிழ்த்திரையுலகுக்குப் பெருமை சேர்த்துள்ள தம்பி சூர்யா, சுதா கொங்கரா, ஜி.வி. பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட சூரரைப் போற்று படக்குழுவினருக்கும், இயக்குநர் வசந்த், இலட்சுமி பிரியா சந்திரமவுலி, ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படக்குழுவினருக்கும், மடோன் அஸ்வின், யோகிபாபு உள்ளிட்ட மண்டேலா படக்குழுவினருக்கும் பாராட்டுகள் எனத் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ள அவர், சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் எனக் கூறியுள்ளார்.