முக்கியச் செய்திகள் குற்றம்

சாத்தான்குளம் வழக்கு; விசாரணை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் – பென்னிக்கிஸ் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மத்தியச் சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜராகினர்.

அண்மைச் செய்தி: ‘‘முற்போக்கு படைப்புகள் திரையை ஆளட்டும்’ – விருதாளர்களை வாழ்த்திய முதலமைச்சர்’

இதனையடுத்து இன்று வழக்கின் சாட்சிய விசாரணையின்போது, இந்த வழக்கு தொடர்பாக, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த, பெண் காவலர் ரேவதியிடம் சம்பவம் நடைபெற்ற போது வாக்குமூலம் பெற்ற தூத்துக்குடி நீதிபதி சக்திவேல் மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி முன்பாக சாட்சியம் அளித்தார். இதனையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜூலை -29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திண்டுக்கல் அருகே அதிமுக பிரமுகர் அடித்துக் கொலை

Dhamotharan

கோப்ரா திரைப்படம்; இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை

EZHILARASAN D

சவுராஷ்ட்ரா – தமிழ் மக்களின் உறவுகள் மேம்பட வேண்டும்-மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

Web Editor