LEO திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் – படப்பிடிப்பை நிறைவு செய்த பின் இயக்குநர் மிஷ்கின் பதிவு

இளையதளபதி விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் மிஷ்கின். வித்தியாசமான கதைகங்களை தேர்வு செய்து இயக்கி அதன்…

இளையதளபதி விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் மிஷ்கின். வித்தியாசமான கதைகங்களை தேர்வு செய்து இயக்கி அதன் முலம் வெற்றி இயக்குநர் என்ற அடையாளத்தையும் பெற்றவர். இவர் இயக்கிய அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இயக்கத்தை தாண்டி , ஒரு சிறந்த நடிகராகவும் பார்க்கப்படும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் தயாராகி வரும் லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளார். படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக காஷ்மீர் சென்றிருந்த இயக்குநர் மிஷ்கின், படத்தில் தான் நடித்த அனுபவங்களை பற்றியும், படக்குழுவினர் தன்னிடம் நடந்துகொண்ட விதத்தை பற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இன்று அதிகாலை போடப்பட்டுள்ள அந்த பதிவில் காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன்… minus 12 டிகிரியில் 500 பேர் கொண்ட Leo படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது. ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினார்கள். Assistant director-களின் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக்கொண்டிருந்தார்.

என் லோகேஷ் கனகராஜ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தான். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான், அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன்.

என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன். Leo திரைப்படம் நிச்சசயம் மிகப்பெரிய வெற்றியடையும் என்று அண்ட் பதிவில் கூறியுள்ளார்.

மேலும் விஜய் அவர்களுடன் இணைந்து ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடிக்கும் இப்படத்தினை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், காஷ்மீர் ஷெடியுல் மார்ச் 30 -ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளதாகவும், அடுத்த ஷெடியுல் சென்னையில் நடக்கவுள்ளதாகவும், இந்த ஆண்டு மே மாதத்துக்குள் லியோ படத்தின் மொத்த ஷூட்டிங் நிறைவு பெரும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.