லியோ’ திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து மாமன்னன் பட இயக்குநர் மாரி செல்வராஜ் ட்வீட் (எக்ஸ்) தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரமாண்டமாக இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அக்டோபர் 19-ம் தேதி ‘லியோ’ திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.148.5 கோடி வசூலைக் குவித்தது. நடப்பாண்டில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த திரைப்படம் என்ற சாதனையையும் ‘லியோ’ படைத்துள்ளது.
https://twitter.com/mari_selvaraj/status/1715727773418033533
இந்நிலையில் ’லியோ’ படக்குழுவிற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இயக்குனர் லோகேஷ் மற்றும் நடிகர் விஜய் மீண்டும் திரையில் இணைந்ததை பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். லியோ தாஸ் கதாபாத்திரம் உண்மையில் மிரட்டலாக உள்ளதாகவும், லியோ படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.







