இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேறுவது யார்?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த 1-ம் தேதி தொடங்கி சண்டைக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. 9 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேருடன்…

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த 1-ம் தேதி தொடங்கி சண்டைக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. 9 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேருடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி முதல் வாரமே அனல் பறந்தது. கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

கடந்த சீசன்களை போல் இல்லாமல் இரண்டு வீடுகள், இரண்டு பிக் பாஸ் குரல்கள் என பல்வேறு புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆட்ட விதிகளின்படி, நிகழ்ச்சியின் முதல் வார இறுதியில் மக்களின் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து, உடல்நிலையை கருத்தில் கொண்டு பவா செல்லத்துரை பிக் பாஸ் வீட்டைவிட்டு தாமாக முன்வந்து வெளியேறினார்.

இந்த வாரம் பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் போட்டியாளர்களுக்கு இடையே ‘ஆக்ஸிஜன் எமர்ஜென்ஸி’ என்ற டாஸ்க் வைக்கப்பட்டது. இதில், ஸ்மால் பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் பிரதீப் ஆண்டனியை பிக் பாஸ் வீட்டின் போட்டியாளர் விஜய் வர்மா தூக்கி தரையில் அடித்தார். அதேபோல், விஷ்ணுவிடமும் விஜய் கடுமையாக நடந்து கொண்டார்.முன்னதாக, முதல் வாரத்திலேயே பிரதீப் ஆண்டனியை மிரட்டும் விதமாக பேசிய விஜய்க்கு கமல் மஞ்சள் எச்சரிக்கை கொடுத்திருந்தார். இதனால், இந்த முறை சிவப்பு எச்சரிக்கை கொடுத்து விஜய் வர்மாவை கமல் வெளியேற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.தற்போது கமல் பங்கேற்கும் வார இறுதி நாள் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், எவிக்‌ஷனில் குறைவான வாக்குகள் பெற்ற விஜய் வர்மா வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.