குலசை தசரா திருவிழா 2023: மஹிஷாசுரன் வீதி உலா…

குலசை முத்தாரம்மன் கோயிலில், தசரா திருவிழாவை முன்னிட்டு, வரும் 24ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ள நிலையில், மஹிஷாசுரன் வீதிஉலா நடைபெற்றது. கர்நாடக மாநிலம், மைசூருக்கு அடுத்தபடியாக, தசரா திருவிழா, தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம்…

குலசை முத்தாரம்மன் கோயிலில், தசரா திருவிழாவை முன்னிட்டு, வரும் 24ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ள நிலையில், மஹிஷாசுரன் வீதிஉலா நடைபெற்றது.

கர்நாடக மாநிலம், மைசூருக்கு அடுத்தபடியாக, தசரா திருவிழா, தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில், வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு நடைபெறும் தசரா திருவிழா, இந்தாண்டு கடந்த 15-ம் தேதி தொடங்கியது. 12 நாள் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மஹிஷா சூரசம்ஹாரம், வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு, ஏழாம் திருவிழாவின் போது (அக். 21) மஹிஷாசுரன் தயாராகினார். அப்போது, மஹிஷாசுரனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மஹிஷாசுரன் திருவீதி உலா வந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.