அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தின் சட்டமியற்றும் அவையில் இந்துபோபியாவைக் கண்டித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தின் சட்டமியற்றும் அவையில் இந்துபோபியாவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரத்யேகமாக இந்துபோபியாவை குறித்து அமெரிக்கா மாகாணத்தின் சட்டப் பேரவை அதிகாரப்பூர்வமாக சட்டமியற்றுவது இதுவே முதல்முறையாகும். தகவல் தொழில்நுட்பம், வங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மற்றும் சிலிகான் வேலி போன்ற இடங்களில் இந்தியர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வேலை மற்றும் கல்வி நிமித்தமாக பலர் அமெரிக்காவில் குடியேறி வரும் நிலையில் அங்கே வசிக்கும் இந்துக்களுக்கு எதிரான இந்து மத வெறுப்பு மனநிலை அதிகரித்து வருவதாகவும் ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் சட்டமியற்றும் அவையில் இந்துபோபியாவைக் கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜார்ஜியா மாகாணம் இயற்றிய சட்ட மசோதாவில், ” 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பின்பற்றும் உலகின் பழமையான மதங்களில் ஒன்றாக இந்து மதம் உள்ளது. அமைதி, நம்பிக்கை, பரஸ்பர அன்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்து மதம் இருக்கிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அதிகளவில் இந்து மதத்தை பின்பற்றும் மக்களை கொண்டுள்ளது.
எனவே இந்து போபியா குறித்து அட்லாண்டா புறநகரில் உள்ள ஃபோர்சித் கவுண்டி பிரதிநிதிகளன லாரன் மெக்டொனால்ட் மற்றும் டோட் ஜோன்ஸ் ஆகியோர் இந்தத் தீர்மானத்தைக் சட்டமியற்றும் அவையில் கொண்டு வந்தனர். ஜார்ஜியாவில் உள்ள அட்லாண்டா, அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய இந்திய-அமெரிக்க புலம்பெயர் சமூகங்களில் ஒன்றாகும்.