கால் இறுதிப் போட்டிக்கான தகுதிப்போட்டியில் மதியம் திருச்சி ஜே ஜே கல்லூரி அணி_பாரதிதாசன் பல்கலைக்கழக அணியும் மோதின இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ் சார்பில் நடைபெற்று வரும் NCL T20 போட்டியின் மூன்றாவது நாள் போட்டி இன்று மதியம் A.வீரைய்யா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்போட்டியை A.V.V.M ஸ்ரீ புஷ்பம் கல்லூரியின் தலைவர் டி. கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களால் டாஸ் போடப்பட்டு போட்டி துவங்கி வைக்கப்பட்டது.
இப்போட்டியில் திருச்சி ஜே ஜே கல்லூரி அணி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக அணிகள் மோதின, முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த திருச்சி ஜேஜே கல்லூரி அணியினர் களமிறங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்கள் எடுத்தனர். இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக அணியின் பந்துவீச்சாளர்கள் நவநீதகிருஷ்ணன் , அருண் , அழகர் ஆகியோர் நான்கு ஓவர்கள் பந்துவீசி தல இரண்டு விக்கெட்களை வீழ்த்தி திருச்சி ஜே ஜே கல்லூரி அணியினரை 89 ரன்களுக்குள் சுருட்டினர்.
இதனைத் தொடர்ந்து 90 ரன்கள் என்ற இலக்குடன் பாரதிதாசன் பல்கலைக்கழக அணியினர் களம் இறங்கினர், இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக அணியினர் 12.2 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 92 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இப்போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி 13 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நவநீதகிருஷ்ணன் ஆட்டநாயகன் விருதினை தஞ்சை கே.ஜி பல்நோக்கு மருத்துவமனையின் மருத்துவர் மோனிஷ் அவர்களால் வழங்கப்பட்டது .