கேகேஆரை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி டி.எல்.எஸ் முறைப்படி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், 16வது ஐபிஎல் தொடர் கோலாகலமாக நேற்று தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், நடிகைகள் தமன்னா, ராஷ்மிகா ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தொடக்க விழா நிகழ்வை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் சிஎஸ்கே-ஐ வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து இன்று நடைபெற்ற, ஐபிஎல் 2023 இன் மழையால் பாதியில் போட்டி நிறுத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. போட்டியில் ஷிகர் தவான், பானுகா ராஜபக்சே மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் அற்புதமான ஆட்டத்தால் பஞ்சாப் கிங்ஸ் ஏழு ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 191/5 ரன்களை குவித்தது. ராஜபக்சே 50 மற்றும் தவான் 40 ரன்கள் எடுத்தனர். KKR தரப்பில் டிம் சவுத்தி 2 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் மற்றும் உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 192 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் மந்தீப் சிங் இறங்கினர். இருவரும் ஆட்டத்தில் வேகத்தை கொண்டு வருவந்தனர். இருவரும் முறையே 35 மற்றும் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன் பின் துரதிர்ஷ்டவசமாக, மழை நிற்காததால் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ், 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, ஆட்டம் நிறுத்தப்பட்டது.







