‘கடல் மீன்கள்’ இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்!

மூத்த திரைப்பட இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 90. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மீண்டும் கோகிலா’, ‘கல்யாணராமன்’, ‘எல்லாம் இன்பமயம்’, ‘கடல் மீன்கள்’, ‘மகராசன்’ உள்பட பல்வேறு…

மூத்த திரைப்பட இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 90.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மீண்டும் கோகிலா’, ‘கல்யாணராமன்’, ‘எல்லாம் இன்பமயம்’, ‘கடல் மீன்கள்’, ‘மகராசன்’ உள்பட பல்வேறு படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். இது தவிர முத்து எங்கள் சொத்து, அடுத்தாத்து ஆல்பர்ட், மனக்கணக்கு, பல்லவி மீண்டும் பல்லவி உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

கடந்த சில நாட்களாக, வயது மூப்பு காரணமாக உடல் நலமில்லாமல் இருந்த இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன், இன்று காலை காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது. மூத்த இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த ஜி.என்.ரங்கராஜனின் மகன் ஜி.என்.ஆர்.குமரவேலன். இவர், பிருத்விராஜ் நடித்த,‘நினைத்தாலே இனிக்கும்’, ‘யுவன் யுவதி’, ‘ஹரிதாஸ்’ உள்பட சில படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.