முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

12ம் வகுப்பு தேர்வு குறித்து நாளை மறுதினம் முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ்

பனிரெண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடத்துவது குறித்து, நாளை மறுதினம் முடிவெடுக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி திருச்சியில் முன்களப் பணியாளர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை நடத்துவது குறித்து கல்வியாளர்கள். பெற்றோர் நலச் சங்கத்தினர், ஆசிரியர் அமைப்புகள் உள்ளிட்டோரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

அதன் அடிப்படையில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை நடத்துவது குறித்து நாளை மறுதினம் தமிழக முதலமைச்சர் முடிவெடுப்பார் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Advertisement:

Related posts

இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 13 பேருக்கு புதியவகை கொரோனா பாதிப்பா? : முதல்வர் பழனிசாமி விளக்கம்!

Saravana

“தமிழ் மொழியின் இலக்கிய வளம் மிகவும் அற்புதமானது” – பிரதமர் மோடி!

Jeba

தென் மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள்: அமைச்சர்

Ezhilarasan