போதைபொருள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டையில் நடந்த வேண்டாம் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ் பேசினார்.
நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் சார்பாக “வேண்டாம் போதை “ விழிப்புணர்வு இயக்கம்
புதுக்கோட்டை திருக்கோகரணம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ் தலைமையில் நடைபெற்றது. 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேண்டாம் போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாணவர்களிடையே நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் சார்பாக நடைபெறும் வேண்டாம் போதை விழிப்புணர்வு இயக்கத்தில் கலந்துகொண்டு மாணவர்களிடையே பேசிய மாவட்ட துணை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ் மாணவர்கள் வருங்கால சமுதாயத்தின் முன்னோடிகளாக வரவேண்டும்.
பள்ளிப் பருவம் முடிந்து கல்லூரி செல்லும் பொழுது மாணவர்கள் மிகவும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் தீய பழக்கவழக்கம் கொண்ட நண்பர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனை செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் போதை பொருட்களை பயன்படுத்தினாலும் சிறை தண்டனை. ஆகவே மாணவர்கள் நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொண்டு முன்னோடியாக திகழ வேண்டும்.
மாணவர்களை சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வேண்டாம் போதை விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தி வருகிறது. மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருந்து சமுதாயத்தில் போதைப் பொருட்களை பயன்படுத்துவது குறித்து தகவல் அறிந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சிக்கு மாவட்ட காவல்துறையின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டார்.