கேரள மாநிலம், கொல்லத்தில் தனியார் கல்லூரியில் நீட் தேர்வு எழுத சென்ற
மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றி விட்டு தேர்வு எழுத வைத்த விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் 8 பேர் மீது இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவர்களை கைது செய்ய கேட்டு இளைஞர் காங்கிரசார் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் அமைப்பு சார்பில் இரண்டாவது நாளாக கல்லூரி முன் போராட்டம் நடைபெற்றது. போலீசாரிடம் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் கொல்லத்தில் கடந்த 18 ம் தேதி தனியார் கல்லூரியில் நீட் தேர்வு
எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடையை கழற்றி வைத்து விட்டு தேர்வு எழுத வைத்த
விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பெற்றோர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து கொட்டாரக்கரை காவல் நிலைய போலீசார் நீட் தேர்வு கண்காணிப்பாளர் மற்றும் நான்கு பெண்கள் உட்பட 8 பேர் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவர்களை உடனே கைது செய்ய கேட்டு இளைஞர் காங்கிரசார் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் அமைப்பு சார்பில் இரண்டாவது நாளாக கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடப்பாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. தேர்வு எழுத 18 லட்சத்து 72 ஆயிரத்து 329 பேர் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 10.64 லட்சம் பேர் மாணவிகள். நாடு முழுவதும் 497 மாநகரங்களில் 3,570 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. நாட்டிற்கு வெளியே 14 மாநகரங்களிலும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான இந்த நுழைவுத் தேர்வு நடைபெற்றது. தேசிய தேர்வு முகமை இந்த நுழைவுத் தேர்வை நடத்தியது.
கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள மர்தோமா தகவல் தொழில்நுட்ப மையத்தில் நீட் தேர்வு எழுதச் சென்றவர்களிடம் மெட்டல் டிடக்டர் கொண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அப்போது, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் தாங்கள் அணிந்துள்ள ப்ராவை கழற்றுமாறு சோதனை நடத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








