தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மகாராஷ்டிராவில் சுமார் 56 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்யவும், முறையாக பயிர்க் கடனைத் திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு ரூ.50,000 ஊக்கத் தொகை வழங்கவும் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பாட்னவிஸ் ஒப்புதல் வழங்கியுள்ள செய்தியைத் தாங்கள் அறிவீர்களா?
விவசாயிகள் நலனை எப்படிக் காப்பது என்பதை மகாராஷ்டிர பாஜக அரசைப் பார்த்து இனியாவது கற்றுக் கொள்ளுங்கள்! மாற்று சக்தி என்று வீணாக முழங்குவதைவிட மற்ற மாநிலங்களைப் பார்த்து நன்முயற்சிகளைப் பின்பற்றுங்கள்! உடனடியாக, தமிழக விவசாயிகளின் துயர் துடைக்கும் விதமாக, ஏற்கனவே அறிவித்த ஏமாற்றுத் தள்ளுபடியைத் திரும்பப் பெற்று, கொடுத்த வாக்குறுதிப்படி பயிர்க் கடனை முழுமையாக ரத்து செய்யுங்கள்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







