கருணாநிதியின் 103வது பிறந்தநாள் – ராகுல்காந்தி மரியாதை!

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவு கூர்ந்து பதிவிட்டும் அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தியும் வருகின்றனர். இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கலைஞர் மு.கருணாநிதி தமிழ்நாட்டு மக்களின் கண்ணியத்திற்காகவும், சமூக நீதிக்காகவும், விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர். அவர் முதல்வர் மட்டுமல்ல, எழுத்தாளர், கவிஞர், சிந்தனையாளரும் ஆவார். ஒவ்வொரு இந்தியனையும் சமமாக நடத்தும் அரசிலமைப்பின் மீது அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் பிறந்தநாளுக்கு என்னுடைய பணிவான அஞ்சலியை செலுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.