தமிழ்நாட்டில் முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றது முதல் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று தமிழ்நாட்டில் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று பதவியேற்க உள்ளார்.
இதையொட்டி, தற்போதைய சட்டம் – ஒழுங்கு டிஜிபி, சந்தீப் ராய் ரத்தோருக்கு சிறைத்துறை டிஜிபி பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் நேரத்தில், சந்தீப் ராய் ரத்தோர் தமிழக டிஜிபி மற்றும் காவல் படைத் தலைவராக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த கே.சங்கர், சிஐடி அமலாக்கத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.







