டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.
சென்னை, கோவை மாநகராட்சிகள் டெண்டர் முறைகேடு மற்றும் சொத்து குவித்ததாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யககோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.எம்.டி.டீக்காராமன் அமர்வில் விசாரணை நடைபெற்றன. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்திருந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
முன்னதாக இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முறையாக விசாரணை நடத்தாமல் எஸ்.பி. வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போதுமான கால அவகாசம் இருந்த போதும் அவசரமாக ஏன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த வழக்குகளில் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பளிக்க உள்ளனர்.








