முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 879 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,61,736 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தநிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.36 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 879 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,71,058 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 97,168 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 1.22 கோடி பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை 10.85 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,22,53,697 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவுக்கு 12,64,698 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

சர்கார் பட பாணியில் வாக்குப்பதிவு!

Karthick

தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைக்கட்டியது!

Gayathri Venkatesan

16-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கியது!