“இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்க முடியாது” – அமைச்சர் சேகர்பாபு

“இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஒரு அங்குலம் நிலத்தை கூட ஆக்கிரமிக்க முடியாது” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருநீர்மலை கோவிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஊரக தொழில்துறை அமைச்சர்…

“இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஒரு அங்குலம் நிலத்தை கூட ஆக்கிரமிக்க முடியாது” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருநீர்மலை கோவிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஊரக தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தீருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில் 270 படிக்கட்டுகள் உள்ளன. இந்த கோவில் படிக்கட்டுகளில் ஏறி முதியோர் சாமி தரிசனம் செய்வதில் சிரமம் இருந்து வருகிறது. முதியோர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் ரோப் கார் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “கோவில் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். 13 குடியிருப்புகள் கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தீர்நீர்மலை மலைக்கோவில் வெயில் காலத்தில் பொதுமக்கள் சென்று வரும் வகையில் நிழற்குடை அமைக்கப்படும்.” என்றும் தெரிவித்துள்ளார். மேலும்,

இந்து சமய அறநிலையத்துறை வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. திருக்கோவிலுக்கு சொந்தமான ஒரு அங்குலம் கூட விட்டுக்கொடுக்காமல் அனைத்து நிலங்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.