கடலூர் சோதனைச்சாவடியில் சக போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூரை அடுத்த உண்ணாமலை செட்டி சோதனைச் சாவடி பகுதியில் மதுவிலக்கு போலீசாருடன் இணைந்து தாலுகா காவல்நிலைய போலீசாரும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அதன்படி
புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் காண்டீபன் வாகன சோதனையில் இருந்தபோது சக போலீசாரை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணைக்கு பிறகு கண்டீபன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.







