நாமக்கல்லில் முட்டை விலை குறைவு!

நாமக்கல் மண்டலத்தில் 5 ரூபாய் 20 காசுகளாக இருந்த முட்டை விலை 20 காசுகள் குறைந்து பண்ணைக் கொள்முதல் விலை 5 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினசரி முட்டை கொள்முதல் விலையை நாமக்கல்லில் உள்ள தேசிய…

நாமக்கல் மண்டலத்தில் 5 ரூபாய் 20 காசுகளாக இருந்த முட்டை விலை 20 காசுகள் குறைந்து பண்ணைக் கொள்முதல் விலை 5 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினசரி முட்டை கொள்முதல் விலையை நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி இன்றைய விலையில் முட்டை ஒன்றுக்கு 20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முட்டையின் தேவை கடந்த ஒருவார காலமாக குறைந்துள்ளது.

மேலும், நாமக்கல் மண்டலத்தில் பண்ணைகளில் முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் முட்டையின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது எனவும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.