சுஷ்மிதா சென் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பிறகு ராம்ப் வாக்கில் கலந்து கொண்டு ஒய்யராமாக நடந்து வரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகையான சுஷ்மிதா சென் கடந்த 1994ம் ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார். இவர் தமிழில் ரட்சகன் படத்தில் நாகர்ஜூனாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். கடைசியாக ஆர்யா என்ற வெப் சீரிஸில் நடித்தார். இந்த தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பானது. இன்னும் சில வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுஷ்மிதா சென் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுஷ்மிதா சென்னுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைப் பிறகு இப்போது நலமாக இருக்கிறார். இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், மாரடைப்பு ஏற்பட்ட பிறகு மீண்டும் சுஷ்மிதா சென் ராம்ப் வாக் செய்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லாக்மே பேஷன் ஷோவில் பங்கேற்ற அவர் பழுப்பு மஞ்சள் நிறத்தில் லெகங்கா அணிந்து ஒய்யராமாக நடந்து வந்தார். அவர் நடந்து வரும் போது அரங்கமே கரயொலியால் அதிர்ந்தது. அவரது கம்பீராமான நடை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.







