சீர்காழியில் கனமழையால் நிரம்பிய ஏரி – மீன்வரத்து அதிகரிப்பால் கிராம மக்கள் மகிழ்ச்சி!

சீர்காழி அருகே கனமழையால் நிரம்பிய திருவாளி ஏரியில் கட்லா, ரோக், ஜிலேபி உள்ளிட்ட சுவையான மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனை வலையிட்டு கிராம மக்கள் பிடித்து வருகின்றனர். சீர்காழி அருகே திருவாலி கிராமத்தில் சுமார்…

Lake filled with heavy rain in Sirkazhi - Villagers happy with increase in fish catch!

சீர்காழி அருகே கனமழையால் நிரம்பிய திருவாளி ஏரியில் கட்லா, ரோக், ஜிலேபி உள்ளிட்ட சுவையான மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனை வலையிட்டு கிராம மக்கள் பிடித்து வருகின்றனர்.

சீர்காழி அருகே திருவாலி கிராமத்தில் சுமார் 132 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஏரி உள்ளது. சுமார் 17 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி நீரை பயன்படுத்தி திருவாலி, புதுதுறை, மண்டபம், நெப்பத்தூர், நிம்மேலி, திருநகரி, காரைமேடு, தென்னலக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி அவ்வபோது கனமழை பெய்த நிலையில் திருவாலி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகி ஏரி முழுவதும் தற்போது நிரம்பி உள்ளது. ஏரி நிரம்பியதால் ஏரியிலிருந்து பாசனத்திற்கு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏரியில் அதிக அளவு மீன்கள் அடித்து வரப்பட்டுள்ளது. இதனால் ஏரியில் மீன் பிடிக்க குத்தகைக்கு தற்போது விடாததால் ஏரியில் அப்பகுதி கிராம மக்கள் தூண்டில் இட்டும் வலையிட்டும் மீன்களை பிடித்து வருகின்றனர். இவ்வாறு ஏரியில் கட்லா, ரோக், ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் வந்துள்ளன என்றும், ஏரி மீன்கள் மிகவும் சுவையாக இருப்பதாகவும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.