பாஜகவை எதிரிக்கட்சி என ஸ்டாலின் விமர்சித்திருப்பது ஏற்கத் தக்கதல்ல என பாஜக வேட்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். இந்நிலையில், எல்டாம்ஸ் சாலையில் அவர் பரப்புரையில் ஈடுபட்டு, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அவருடன் பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோரும் வாக்கு சேகரித்தனர். பரப்புரையின்போது பேசிய குஷ்பு, மாநில அரசு, பல்வேறு நல்ல திட்டங்களைப் பெற, மத்திய அரசின் உதவி தேவை என கூறினார்.
சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடாதது வருத்தம் அளிக்கவில்லை எனக்கூறிய குஷ்பு, இரட்டை இலையும், தாமரையும் ஒன்றாகத்தான் இருக்கும் எனவும், மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் எனத் தெரிவித்தார்.







