கட்டுரைகள் தமிழகம்

சைகை மொழிப்பெயர்பாளர் கொண்டு சேர்க்கும் தேர்தல் செய்திகள்!


வெ. காயத்திரி

கட்டுரையாளர்

தேர்தல் குறித்த செய்திகளை மாற்றுத்திறனாளிகளும் தெரிந்துக்கொள்ளும் வகையில் தமிழக தேர்தல் ஆணையம் சைகை மொழிப்பெயர்பாளரை நியமித்திருக்கிறார்கள். இது மாற்றுத்திறனாளிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் உள்பட தேர்தல் ஆணையமும் மூழு வீச்சில் செயல்பட்டுவருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தினந்தோறும் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு, தொலைக்காட்சி வாயிலாக வெளியிடும் செய்திகளை, சைகை மொழிபெயர்ப்பாளர் சுரேஷ் என்பவர் மூலம் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கும் கொண்டு சேர்க்கப்படுகிறது. தேர்தலுக்காக ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் சைகை மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையர் சத்யபிரதா விற்கு பின்புறம் சைகை மொழிபெயர்ப்பாளர் சுரேஷ்

பெரும்பாலும் தொலைக்காட்சி ஊடகங்கள் சைகை மொழிபெயர்ப்பாளரை பயன்படுத்தி மாற்றுத்திறனாளி மக்களுக்கும் செய்திகளை தெரிவித்து வருகின்றன. இதேபோல் தற்போது, தமிழக தேர்தல் ஆணையமும் முதல்முறையாக இந்த முறையை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சைகை மொழிபெயர்ப்பாளரை பயன்படுத்துவது இதுவே முதல்முறையாகும் என்பதால் இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அரசியல், பொருளாதாரம், கல்வி என இன்னும் இதுபோல பலத்துறைகளில் நடக்கும் முக்கிய நாட்டு நடப்புகளை அன்றாடம் செய்திகள் வாயிலாக சாமானிய மக்கள் தெரிந்துக் கொள்கின்றனர். இந்த சாமானிய மக்கள் என்று சொல்லும்போது அதில் மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். அவர்களில் எத்தனை பேருக்கு இந்த அனைத்து செய்திகளும் முழுவதுமாக சென்று சேர்கப்படுகிறது என நியாயமான கேள்வி ஒன்று உள்ளது.

எனவே இதேபோல் தமிழ்நாடு சட்டப்சபை, நாடாளுமன்றத்திலும் அரசியல் தலைவர்கள் பேசுவதை மாற்றுத்திறனாளிகள் எளிதில் புரிந்துக் கொள்ளும்படியாக, இந்திய அரசு அதற்கென பிரத்தியேகமாக சைகை மொழிபெயர்ப்பாளர்களை நிரந்தரமாக பணியமர்த்தினால், அது நாட்டில் மாற்றுத்திறனாளிகளின் முக்கியத்துவத்தைக் காட்டும் அல்லவா?

தமிழ்நாட்டில் 11,79, 963 மாற்றுத்திறனாளிகள் உள்ளதாக கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் குறித்த செய்திகளை மாற்றுத்திறனாளிகளும் அறிய தேர்தல் ஆணையம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை ஒரு நல்ல முன்னேற்பாடாகும்.

மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு, நாட்டிற்கு இன்றியமையாததாக இருக்கிறது. இன்னும் பல்வேறு துறைகளில் இவர்கள் பணிகள் மென்மேலும் தொடர அரசு சைகை மொழிபெயர்ப்பாளரை முடிந்தவரை தேவைப்படும் இடங்களில் பயன்படுத்துவது மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை காட்டுவதோடு அது அவர்களுக்கு அதுவே ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

உயிர் மீது ஆசையிருந்தால்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

EZHILARASAN D

சாப்ட்வேர் எஞ்சினீயர் To இயற்கை விவசாயி; சாதித்த சித்ரா தேவி

EZHILARASAN D