குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திற்கு கொரோனா!

கடலூர் குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில், தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், தொற்றின் 2ம் அலையின்…

கடலூர் குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில், தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், தொற்றின் 2ம் அலையின் தாக்கத்தை எதிர்கொள்ள முன்தாயாரிப்புகளோடு இருக்குமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே, சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ், காரைக்கால் அதிமுக வேட்பாளர் அசனா, மநீம வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ்பாபு மற்றும் அண்ணாநகர் தொகுதி வேட்பாளர் பொன்ராஜ் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக தேமுதிக பொதுச் செயலாளர் எல்.கே.சுதிஷ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.