பெங்களூரில் ஊரடங்கு இல்லை: கர்நாடகா அரசு

கர்நாடகாவில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகமாக இருந்தபோதிலும் தலைநகர் பெங்களூரில் ஊரடங்கு இல்லை என அம்மாநில முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா கூறியுள்ளார். பெங்களூரில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்துவருகிறது. இதன்காரணமாக…

கர்நாடகாவில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகமாக இருந்தபோதிலும் தலைநகர் பெங்களூரில் ஊரடங்கு இல்லை என அம்மாநில முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா கூறியுள்ளார்.

பெங்களூரில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்துவருகிறது. இதன்காரணமாக நேற்று ஒரே நாளில் பெங்களூரில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,377ஐ தொட்டது. மேலும் கடந்த 14 நாட்களில் மட்டும் 16,921 பேர் கொரோனாவால் பதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரில் இதுவரை 60-ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 6.61 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அம்மாநில முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் அப்போது அவர் பேசுகையில், “பள்ளி, கல்லூரிகள் எப்பொழுதும் போல் இயங்கும். மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருப்பதைவிடப் பள்ளிகளில் கவனமாகவும் ஒழுக்கத்துடனும் ஒரே இடத்தில் இருப்பார்கள். மேலும் அடுத்த 15 நாட்களில் தேர்வுகள் நடைபெறும் என்பதால் பெங்களூரில் மட்டும் ஊரடங்கு அமல்படுத்துவதற்கான சாத்தியமில்லை” என்றார்.
இதனையடுத்து கர்நாடக மாநிலத்தில் அடுத்த 15 நாட்களுக்கு எந்தவொரு போராட்டங்களுக்கோ பேரணிகளுக்கோ அனுமதியில்லை என அரசு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.