வங்கிகளின் இணைப்பைத்தொடர்ந்து, குறிப்பிட்ட வங்கிகளின் காசோலைகள் ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகும் செல்லும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடனும், ஓரியன்டல் வங்கி, யுனைடெட் இந்தியா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும் இணைக்கப்பட்டுள்ளது. அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும், ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடனும் இணைக்கப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இணைக்கப்பட்ட வங்கிகளின் பழைய காசோலைகள் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து செல்லாது என்று வதந்திகள் பரவியது. இதற்கு வங்கிகள் தரப்பில் தற்போது விளக்கம் ஒன்று வெளியாகி உள்ளது. இதில் புதிய காசோலைகளை பெற்றுக்கொள்ளும் படி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் பழைய காசோலைகள் பயன்பாட்டில் இருக்கும் என்றும் புதிய காசோலைகள் பெறும் வரை கால அவகாசம் வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.