விமரிசையாக நடைபெற்ற குமிளங்காடு ஆதி நாகாத்தம்மன் கோயில் பால்குட திருவிழா!

சீர்காழி அருகே குமிளங்காடு ஆதி நாகாத்தம்மன் கோயிலில் நடைபெற்ற பால்குட திருவிழாவில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். சீர்காழி அருகே குமிளங்காட்டில் ஆதிநாகத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த…

சீர்காழி அருகே குமிளங்காடு ஆதி நாகாத்தம்மன் கோயிலில் நடைபெற்ற பால்குட திருவிழாவில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

சீர்காழி அருகே குமிளங்காட்டில் ஆதிநாகத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த
கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் நாக சதுர்த்தி அன்று பால் குட திருவிழா
நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டு பால்குட திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. பால்குட திருவிழாவை முன்னிட்டு புத்தூர் மெயின் ரோட்டில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் தலையில் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக நாகத்தம்மன் கோயிலை வந்தடைந்தனர்.

மேலும் சில பக்தர்கள் அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட பால்குடம் நாகாத்தம்மன் கோயிலை வந்தடைந்ததையடுத்து நாகாத்தம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த பால்குடம் திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.