சந்திரயான்-3 எடுத்த புதிய படங்களை வெளியிட்டது இஸ்ரோ!

நிலவில் சந்திரயான்-3 எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.  ‘சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 – எம்4 ராக்கெட் ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில்…

நிலவில் சந்திரயான்-3 எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. 
‘சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 – எம்4 ராக்கெட் ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, புவி சுற்றுவட்டாரப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது
இந்நிலையில் நிலவுக்கு மிக நெருக்கமான, இறுதிக் கட்ட சுற்றுப்பாதையில் வலம் வரும் சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து லேண்டா் கலன் கடந்த 17ஆம் தேடி விடுவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.  சந்திரயான்-3 விண்கலத்தின் இறுதி வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து நிலவில் தரையிறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ தற்போது தீவிரம் காட்டி வருகிறது. நிலவில் லேண்டரை தரையிறக்குவதற்கான பணிகள் ஆக.23-ஆம் தேதி மாலை 6.04 மணியளவில் மேற்கொள்ளப்படவுள்ளன.
லேண்டரின் வேகம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு  பூஜ்ஜிய நிலையை எட்டியதும் நிலவில் மெதுவாக கலன் தரையிறக்கப்படும். இதற்கான காலம் வெறும் 19 நிமிடம் தான்- ஆனால் ‘சந்திரயான்-3 திட்டத்தின் மொத்த வெற்றியும் அந்த 19 நிமிடங்களில் தான் உள்ளது.
இதனிடையே சந்திரயான்-3 கேமரா எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ பகிர்ந்துள்ளது. விக்ரம் லேண்டர் பாதுகாப்பாக தரையிறங்கும் பகுதியைக் கண்டறிய உதவுவதற்காக அமைக்கப்பட்ட கேமரா மூலம் எடுதத  படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.