கும்பகோணம் நாச்சியார்கோவில் காவல்நிலையத்திற்கு உட்பட்ட எல்லை பகுதிகளில் மருத்துவம் படிக்காமல் போலியாக மக்களுக்கு ஊசி மற்றும்
மருந்துக்களை வழங்கி வந்த இரண்டு போலி மருத்துவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோவில் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் +2 மற்றும் டிகிரி படித்துவிட்டு இரண்டு நபர்கள் மக்களுக்கு போலியாக மருத்துவம் பார்ப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைதொடர்ந்து காவல் துறையினர் நாச்சியார்கோவில் பகுதிகளில் விசாரணை நடத்தி வந்தனர்.அப்போது முருக்கங்குடி பகுதியில் ராஜு என்பவர் லட்சுமி மெடிக்கல் என்ற பெயரில் +2 மட்டுமே படித்துவிட்டு அங்கு வரும் நோயாளிகளுக்கு ஊசி போடுவதுடன் மருந்து,மாத்திரகளை கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலியாக மருத்துவம் பார்த்து வந்த ராஜு அதிரடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் கூகூர் கிராமத்தில் வைஷ்ணவி எனும் பெயரில் மெடிக்கல் நடத்தி நோயாளிகளுக்கு ஊசி மற்றும் மருந்துக்களை வழங்கி வந்த பிஎஸ்சி பட்டதாரியான சரவணன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
கும்பகோணம் பகுதியில் இரண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
—வேந்தன்