புதுக்கோட்டை மாவட்டம் அம்பாள்புரம் மனோன்மணி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் சீறிப்பாயந்த காளைகளை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி அருகே அம்பாள்புரத்தில் அமைந்துள்ளது மனோன்மணி அம்மன் கோவில். இக்கோவில் பங்குனி திருவிழாவினை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொள்வதெற்கென மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாட்டு வண்டிகள் வந்திருந்தன.
இப்போட்டியானது பெரியமாடு,சிறிய மாடு என இரு பிரிவுகளின் கீழ் நடைபெற்றது. பெரிய மாட்டு பிரிவின் கீழ் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்ட 7 ஜோடி மாடுகளுக்கு கல்லூர் வரையிலான 12 கிலோ மீட்டர் தூரம் வரை எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
சிறிய மாட்டு பிரிவின் கீழ் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்ட 13 ஜோடி மாடுகளுக்கு அரசு மேல்நிலைபள்ளி வரையிலான 9கிலோமீட்டர் தூரம் எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
போட்டியில் சீறீப்பாய்ந்த காளைகளை சாலையின் இருபுறமும் நின்றிருந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.பெரிய மாட்டு வண்டி பிரிவில் முதல் பரிசான ரூ.30,022-ஐ மாவூரைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவரது மாட்டுவண்டிக்கும், 2-ம் பரிசான ரூ.25002-ஐ கே,புதுப்பட்டியை சேர்ந்த ஹாலோபிளாக் என்பருக்கும், 3-ம் பரிசான ரூ.20,002-ஐ ரித்தீஸ் என்பவருக்கும் வழங்கப்பட்டது.
—வேந்தன்







