விழுப்புரத்தில் 18 அடியில் நித்யானந்தா சிலை: குடமுழுக்கு நடத்திய பக்தர்!

விழுப்புரம் மாவட்டம், பெரம்பை கிராமத்தில் நித்தியானந்தாவுக்கு 18 அடியில் சிலை அமைத்து நித்தியானந்தாவின் சீடர் குடமுழுக்கு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்த பெரம்பை கிராமத்தில் நித்தியானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம்…

விழுப்புரம் மாவட்டம், பெரம்பை கிராமத்தில் நித்தியானந்தாவுக்கு 18 அடியில்
சிலை அமைத்து நித்தியானந்தாவின் சீடர் குடமுழுக்கு நடத்திய சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்த பெரம்பை கிராமத்தில் நித்தியானந்தாவின்
சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசிய முருகன் கோவில்போல் இங்கு ஒரு
கோவிலைக் கட்டியுள்ளார். கோயில் பணிகள் நிறைவடைந்த நிலையில் 27 அடி முருகன் கோவிலுக்கு ஸ்ரீ பத்துமலை முருகன் ஆலயம் என பெயரிடப்பட்டு இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதேபோன்று கோவிலின் நுழைவுவாயிலில் 18 அடி உயரத்தில் நித்தியானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டு இந்த சிலைக்கும் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. நித்யானந்தா சிவன்போல் வேடம் அணிந்து கையில் சூலத்துடன் தோன்றிய காட்சியைப் போல் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையைப் பார்த்ததும் காவல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நித்தியானந்தா சீடர் முருகன் கோயில் கட்டி அங்கு 18 அடியில் நித்தியானந்தா சிலையை நிறுவி கும்பாபிஷேகம் செய்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.