கோவையில் தனியார் கல்லுாரி பேருந்து மோதிய விபத்தில் தந்தை மகன் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம், கருமத்தப்பட்டி கணபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி நார்த்தங்காடு தங்கவேலு(66). இவரது மகன் நந்தகுமார் (33). நேற்று காலை தனது மகனை ஈரோடு பகுதியில் உள்ள கொடுமுடி கோவிலுக்கு அனுப்புவதற்காக தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கருமத்தம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கிட்டாம்பாளையம் நான்கு ரோடு அருகே வரும் போது பொள்ளாச்சியை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் தங்கவேல் பேருந்தின் முன்புற சக்கரத்தில் சிக்கி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இதில் துாக்கி வீசப்பட்ட நந்தகுமார் உயிரிழந்தார். இது தொடர்பாக தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக கருமத்தப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
—அனகா காளமேகன்







