பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு தமிழில் மட்டுமே நடைபெற வேண்டும் என தெய்வத்தமிழ் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் வருகிற 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை ஒட்டி இந்துசமய அறநிலையத்துறை மற்றும் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழனிக் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தவேண்டும் என தெய்வத்தமிழ் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் தெய்வத்தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழா தமிழ் முறைப்படி நடத்தப்பட வேண்டும் என்றும், சமஸ்கிருதத்தில் வேள்வி யாகம் நடத்தும் பிராமணர்களுக்கு சமமான எண்ணிக்கையில், தமிழ் ஓதுவார்களையும் நியமித்து தமிழிலேயே மந்திரம் உச்சரிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், 2006 போன்ற பல ஆண்டுகளில் தமிழில் அர்ச்சனை என்பதற்கு எந்த தடை ஆனையும் வாங்கவில்லை, இதே தமிழக அரசு தான் அன்னை தமிழ் அர்ச்சனை திட்டத்தை கொண்டு வந்தது, அதற்கு யாரும் தடை ஆனை வாங்கவில்லை.
இதுவரை தமிழ் வழி அர்ச்சனை என்பதற்கு யாரும் தடையானை பெறவில்லை. 2020-ல் தஞ்சை குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்று வழக்கு போடபட்ட போது, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தமிழ் மற்றும் சமஸ்கிரதத்தில் குடமுழுக்கு நடத்துகிறோம் என கூறி இருந்தார்.
கடந்த மாதம் இது குறித்து 21ஆம் தேதி இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபனிடம் தமிழ் பேரவை செயற்குழு உறுப்பினர்கள் நேரில் சென்று மனு அளித்தனர். ஆனால் தற்போது இந்து அறநிலை துறை ஆனையர் புதிதாக ஒரு பரிந்துரை உள்ளது என்று கூறுகிறார்.
மேலும் பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஓதுவார்கள் எங்கு எல்லாம் பாடல்கள் பாடுவார்கள்
என்பது குறித்த விளக்கம் இருக்கிறது. அதில் கருவறையில் குடமுழுக்கு நடைபெறும்
போது அர்சகர்கள் என்ன செய்யப் போகிறார்கள். என்ன முறைபடி செய்யப் போகிறார்கள்
என்று ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை . தமிழக அரசு கவனம் செலுத்தி கண்டிப்பாக
தமிழ் முறைப்படி மட்டுமே பழனி முருகன் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியை நடத்த வேண்டும். வேள்விச் சாலைகளில் கருவறைக்குள் தமிழ் ஓதுவார்கள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என தமிழக அரசிற்கு, தெய்வத்தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் வேண்டுகோள் வைத்துள்ளார்










