முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

”சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய் விரும்ப மாட்டார்” – ஆனந்த்ராஜ்

தனிப்பட்ட மனிதனாக விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்தை விரும்ப மாட்டார் என நடிகர் ஆனந்த் ராஜ் தெரிவித்துள்ளார்.

வெங்கி இயக்கத்தில் சதீஷ் நடிக்கும் புரொடக்சன்ஸ் நம்பர் 3 படத்தின் பூஜை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் நடிகர் சதீஷ், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித் குமார், நடிகர் ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஆனந்த்ராஜ், “இன்று உள்ள இளைஞர்கள் நல்ல கதைகளை வைத்து உள்ளனர். என்னை பார்த்தால் உங்களுக்கு பாவமாக இல்லையா. சூப்பர் ஸ்டார், சுப்பிரம் ஸ்டார் குறித்து நான் வாயை கூட திறக்கவில்லை. எந்த பட்டத்தையும் யாரும் எடுக்க முடியாது. தனிப்பட்ட மனிதனாக விஜய், சூப்பர் ஸ்டார் பட்டத்தை விரும்ப மாட்டார். இது என்னுடைய கருத்து.

நடிகை நடிகர்கள் தற்போது பட்டம் வேண்டாம் என்று நினைக்கிறார்கள். புரட்சித்தலைவர் மற்றும் நடிகர் திலகத்திடம் இருந்து எப்படி பட்டத்தை எடுக்க முடியாதோ, அதுபோலதான் பட்டங்கள் என்பது அங்கேயே இருக்கட்டும் அதை யாரும் எடுத்துக் கொள்ள முடியாது” என்றார்.

அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சதீஷ், “ஹீரோவாக நடிப்பது தான் கஷ்டம். கஷ்டம் என்பதை விட பொறுப்பு அதிகம். காமெடியனாக இருக்கும் போது சமாளித்து விடலாம். ஆனால் கடவுள் கொடுத்த வரம் தான் அது. சத்யராஜ் சாரை முன்னுதாரணமாக சொல்லுவேன். வில்லனாக வந்து ஹீரோவாக நடிக்கிறார். ஆனந்த் ராஜ் சாரும் அப்படி தான்.

வடிவேலு சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். அவருடன் பேசி விளக்கம் அளிப்பேன். விஜய் சார் அன்புக்காக வாரிசு படத்தில் நடித்தேன். கத்தி படத்தில் விஜய் உடன் நடிக்கும் போது கூட இயக்குநர் வெங்கி பிறந்த நாள் குறித்து தெரிவித்தேன். விஜய் சார் போனில் வாழ்த்து கூறினார்.

வாரிசு படத்தின் ரிலீஸ் விபத்து குறித்த கேள்விக்கு பெரிய நடிகர்கள் படம் வரும்போது பாதுகாப்பாக கொண்டாடுவது தவறு இல்லை. அஜித், விஜய் ரசிகர்கள் தீபாவளி மாதிரி தான் அதை கொண்டாடுகிறார்கள். அடுத்ததாக த்ரில்லர், சீரிஸ் படமாக நடிக்க இருக்கிறேன். நிச்சயமாக ஸ்டார் எல்லாருமே பெரிய ஆட்கள் தான். தளபதி 67 படத்தில் இதுவரைக்கும் நான் இல்லை. இனிமேல் இருக்குமா என்றும் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தலைமைச் செயலாளரைப் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

Web Editor

தர்மம் வெல்லும் என்ற நீதியை சொல்லும் நாளாக தீபாவளி அமையட்டும் – டிடிவி தினகரன் வாழ்த்து

EZHILARASAN D

காக்கா தோப்பு பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கக் கோரிய மனு தள்ளுபடி

Gayathri Venkatesan