மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.பி.முனுசாமி

மேகதாது அணை விவகாரத்தில் இருமாநிலங்களுக்கு இடையேயான பிரச்னையை தீர்க்க நீதிமன்றத்துக்கு இணையாக மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி வலியுறுத்தியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில்…

மேகதாது அணை விவகாரத்தில் இருமாநிலங்களுக்கு இடையேயான பிரச்னையை தீர்க்க நீதிமன்றத்துக்கு இணையாக மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி வலியுறுத்தியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, ஒரு மாநிலத்தின் திட்டத்தால் பிற மாநிலங்கள் பாதிக்கப்படுமானால், அதனை தீர்க்க வேண்டியது மத்திய அரசின் தலையாய கடமை என கூறினார்.

நீதிமன்ற தீர்ப்புக்கு இணையாக, நீதிமன்றம் செல்லாமலேயே தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கே.பி.முனுசாமி வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.