ராணிப்பேட்டை அருகே மூடப்பட்ட பழைய குரோமிய தொழிற்சாலையில் உள்ள கழிவுகளை அகற்ற விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.காந்தி உறுதியளித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் புளியங்கண்ணு கிராமம் அருகே செயல்பட்டு வந்த குரோமிய தொழிற்சாலை, பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இந்த நிலையில், மூடப்பட்ட குரோமியம் தொழிற்சாலையை தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
தொழிற்சாலை தொடர்பாக அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் அமைச்சர் ஆர்.காந்தி ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், குரோமிய தொழிற்சாலையில் உள்ள கழிவுகளை அகற்ற விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.







